மீனகம் – உலகவலம்

உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்

woman_child
Posted by பல்லவன் On July - 30 - 2010 0 Comment

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறிய போது தனது மகன் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் இப்போது வெலிக்கந்த இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தாயார் ஒருவர் கண்ணீருடன் நிருபர் தினசேன ரதுகமகேயிடம் கூறியதாக பி.பி.சி.செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

தொலைந்து போன தனது மகனைக் கண்டுபிடிப்பது மிகவும் செலவுகூடிய விடயமாக இருப்பதாகவும் அரிசி விற்று சம்பாதித்த சிறியளவு பணத்தையும் மகனைத் தேடுவதற்காகச் செலவிட்டிருப்பதாகவும் மற்றொரு தாய் கூறியுள்ளார்.

“அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதை தயவு செய்து கூறுங்கள். அவர் உயிருடன் இல்லாவிடில் எமது மனதை திடப்படுத்திக் கொள்வோம்” என்று இந்தத் தாய் கூறியுள்ளார்.

முறைப்பாடுகளைத் தெரிவிக்க வந்திருந்த உறவினர்களில் அநேகமானவர்கள் மெனிக்பாம் அகதி முகாம்களைச் சேர்ந்தவர்களாகும்.

பொலிஸ் நிவாரண சேவை நிலையம் அமைந்திருக்கும் வவுனியா நகருக்குத் தாங்கள் வருவது கஷ்டமான விடயம் என்றும் மெனிக்பாம் முகாமிலேயே இச்சேவையை நடத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளிடம் செல்வதற்குத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.

Popularity: 3% [?]

Share/Bookmark Your Ad Here


Featured Posts

blood_murder_79331

ஓடும் பஸ்ச

திண்டுக்கல் அருகேயுள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன்(30). இவர் பழநி கோவிலில் செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மனைவி அமுதா(24). இவர்களுக்கு இரண்டு ...

forest_destrot

காட்டை அழி

வனத்துறையினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததை மனதில் வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு நிலம் என்றுக்கூறி அந்நபரின் வீட்டை தரைமட்டமாக்கிவிட்டு அங்கிருந்த ...

firindhouse

குடிபோதையி

அவரது துணைவியார் மீலா, மற்றும் குழந்தைகள் நால்வர் மாற்று உடைமைகளும் பள்ளிப்பாட நூல்களும் இல்லாமல் நடுரோட்டில் உள்ளனர். இதற்கு காரணம் தமிழக ...

காங்கிரசார

ஈரோடு, 27.08.2010. கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் ...

girls_masked face

மாணவிகளுக்

மாணவர்களுக்கு விடுதியுடன் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாகவும், மாணவர்களை கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் வந்தன. ...

Sponsors