சிறீலங்காவில் தமிழ் ஊடகம் உட்பட 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள குறித்த ஊடக நிறுவனத்தின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் வெற்றி செய்திப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலினால் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் பற்றி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
என்ன காரணத்திற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பது இதுவரையில் அம்பலப்படுத்தப்படவில்லை. அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்ததாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. எனினும் அதனை உறுதியாக தெரிவிக்கமுடியவில்லை.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Popularity: 4% [?]






