தமிழீழம் அமைய தொடர்ந்தும் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கா உழைக்குமாறு மு.கலைஞர் அவர்களை கேட்டுகொள்கின்றோம்.
மு.கலைஞர்
திராவிடமுன்னேற்ற கழகம்
தமிழ்நாடுஅன்புடன் மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கட்கு:
தமிழ்மொழியில் அக்கறைகொண்டு தமிழ்பற்றோடு தமிழகத்தினை ஆட்சிசெய்த முன்னாள் தமிழக முதல்வரும், ஈழத்தமிழ் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் தமிழ்பற்றாளனான முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு தளத்தில்செயற்பாட்டுடன் நிக்கும் போராளிகளாகிய நாங்கள் ஈழத்தமிழ்மக்களுக்கு நாடுஅமைக்க தொடர்ந்தும் அயராது உழைக்க வேண்டும் எனவேண்டுகின்ற இந்த வேளையில் ஈழத்தில் புரையோடிப்போயுள்ள தமிழ்மக்கள் சிங்கள ஆதிகத்தின் கீழ் வாழ்வது என்பது என்றும் நடக்கக்கூடிய விடயம் அல்ல என்பதை நீங்கள் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் உணர்ந்திருப்பீர்கள் அன்று தமிழ்மன்னர்கள் வெள்ளையருக்கு அடிபணியாமல் பண்டாரவன்னியன் உள்ளிட்ட மன்னர்கள் தனிஇராச்சியம் அமைத்து அவர்கள் பகுதியினை தனித்துவம் மிக்க பகுதியாக வாழ்ந்து காட்டினார்கள் .
அதேபோல் தமிழர்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் ஈழத்தில் தமிழ்மக்களுக்கான தனிஅரசு அமைத்து அதனை நிறுவி அதன் செயற்பாடுகளை பன்னாடுகளுக்கு எடுத்து காட்டி பாரட்டுக்களையும் பெற்றார்கள் இவ்வாறு இருக்கையில்தான் சிங்களஅரசு பன்னாடுகளின் துணைகொண்டு தமிழ்இனத்தினையும் அதற்காக போராடிய விடுதலை அமைப்பினையும் தடைசெய்யப்பட்ட குண்டுகளை பயன்படுத்தி தமிழ்இனத்தினை அழித்தார்கள்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக புரையோடிப்போன தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றும் அழிவுகளும் மாற்றங்களும்தான் நிலைத்தன,இவ்வாறு சுதந்திரமான கட்டமைப்பின் கீழ்வாழ்ந்த தமிழ்மக்கள் குறிப்பாக வன்னிப்பொருநிலப்பரப்பில் தற்போது துப்பாக்கி முனையிலான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் நடந்தேறிக்கொண்டிருப்பதை நீங்கள் செய்திகள் ஊடாக அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.
அங்கு தமிழ்மக்கள் மீது நடத்தப்படுகின்ற ஒவ்வொரு அடக்கு முறைகளும் சிங்கள அரசு வெளியில் தெரியாத வாறு ஊடக சுதந்திரத்தினை முடக்கு கின்றார்கள் ஆசியாக்கண்டத்தில் தமிழ் என்ற மொழி இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக தமிழ் மொழிக்கான நாடாக தமிழீழம் பிறந்திருக்கும் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் தமிழ் அரசியல் கட்சிகளின் கைகளில்தான் ஈழத்தில் வாழ்ந்துவரும் தமிழினத்தின் எதிர்காலம் தங்கி இருக்கின்றது என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றதுசிங்களவன் என்றும் தமிழ்மக்களுக்கான தீர்வினை தரப்போறது இல்லை என்பதை அண்மையில் இந்திய நாடாளமன்ற குழுவின் பயணத்தின் பின்னான செய்திகள் ஊடாக அறிந்துகொள்ளகூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் தாங்கள் அண்மையில் தமிழ்மக்களுக்கு தமிழீழம்தான் தீர்வு என்பதை எடுத்துரைத்துள்ளதுடன் அதனை சிங்கள ஆட்சியாளர்களின் எண்ணங்களிலும் பதியச்செய்துள்ளீர்கள் தாங்களின் இந்த அறிவிப்பிற்கு எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ்மக்களிடமும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வு தமிழீழம் தான் என்பதை உணரவைக்கும் செயற்பாட்டில் உங்கள் கட்சிஈடுபடவேண்டும் அதனை வெற்றிபெற செய்வதில் நீங்கள் தொடர்ந்தும்உழைக்க வேண்டும் என்பதை வேண்டுகின்றோம்.
நாடில்லாமல் ஒருஇனம் அதுவும் தமிழினம் அழிவதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டிர்கள் எனநம்புகின்றோம்.
தமிழீழம் அமைய தொடர்ந்தும் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கா உழைக்குமாறு தாங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழீழ மக்கள்.







Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it


















