தமிழ்உணர்வாளர்களை கட்டுப்படுத்த ஜெயாவின் உதவியை நாடும் றோ..
தமிழ் நாட்டில் பாதுகாப்பு பெற்றுள்ள தமிழீழ பிரிவினைவாதிகள் தொடர்பாக இந்திய அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவின் முன்னாள் தலைவர் கேர்னல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ரீதியில் செயற்படும் தரப்பினருக்கு தமிழகத்தில் உள்ள சில தரப்பினர் ஆதரவு வழங்கி வருகின்றனர். மீண்டும் இலங்கையில் பிரிவினைவாதம் தோன்ற இடமளிக்கக் கூடாது எனவும் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை காட்டியே ஜெயலலிதா தேர்தலில் வெற்றிப்பெற்றார். 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் இலங்கை பிரச்சினையை முன்னிலைப்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.







Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it


















