2012ஆம் ஆண்டில் டெங்கு ஒழிப்பு 30 கோடி

2012ஆம் ஆண்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 டெங்கு நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் பாலித மஹீபால தெரிவித்தார்.

 எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையான காலப் பகுதியியை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

 இதேவேளை டெங்கு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

Pin It