2010ம் ஆண்டு கொலை, சந்தேகநபர் நேற்று தான் கைது


மினுவங்கொட மாதம்மன பகுதியில் ஹொட்டேல் ஒன்றின் முகாமையாளர் உட்பட மூவரை சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

 2010ம் ஆண்டு நவம்பர் 4ம் திகதி இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்கொலைக்கு பயன்படுத்திய 9 மி.மீ ரக பிஸ்டல் மற்றும் 2 ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts: