2011ம் ஆண்டு முதல் 8 மாதங்களில் மாத்திரம் 1158 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவு!


இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களுள் மாத்திரம் 1158 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் பதிவான சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் அதிக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் மொத்தமாக 1804 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகின.

எனினும் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளை மாத்திரமே பொலிஸார் கணிப்பிட்டு கூறியுள்ள போதும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படாத பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மேலும் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: