நல்லூர் செம்மணி வீதியில் செம்மணி இந்து மயானத்துக்கு அருகில் வீதியால் தனியே சென்று கொண்டிருந்த இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் வழிமறித்த நபர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை திருட முற்பட்ட சமயம் அப் பெண் குக்குரல் இட்டு திருடனை திருப்பி தாக்கியபோது தனது முயற்சி பலனலிக்காது என்று தெரிந்து பெண்ணுடைய தேசியஅடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் அடங்கிய பிரயாணப் பையை மாத்திரம் எடுத்துக் கொண்டோடியதாக தெரியவருகிறது. குறிப்பிட்ட பெண் அந்த திருடனின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை புத்திசாதுரியமாக தெரிந்து வைத்திருந்து கோப்பாய் பொலீசில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி பொலீசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
}


10-09-2008 அன்று வீரச்சாவினை தழுவிகொண்ட 6 மாவீரர்கள் வீரவணக்க நாள் 





August 19th, 2010
ஈழமாறன் 




