டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தகவல்கள் கிடைத்துள்ளன.
அரசாங்கத்தின் அனுசரனையில் சிறி டெலோ அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலியான கச்சேரி மூலம் இந்த மோசடிகள் அரங்கேற்றுப்பட்டு வருவதுடன் இவர;கள் அறவிடும் தொகையில் குறிப்பிடதக்களவு பங்கு அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்ளப்படுகிறது எனவும் மேலும் தெரியவருகிறது. சிறிடெலோ அமைப்பின் பொறுப்பாளராக உதயன் என்பவர் செயற்பட்டு வருகிறார் இவர் நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று அந்நாட்டு குடியுரிமை பெற்றவராவார்
இவரை தவிர ஜெர்மனியில் குடிரிமை பெற்ற நிமோ இந்த அமைப்பில் செயற்பட்டு வருகிறார் இவர்கள் இருவரும் 1098 ஆம் ஆண்டுகளில்
இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டவர்களாவர் இதேவேளை இந்த மோசடியில் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற தீரன் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளார்
இவர் இலங்கை- இந்திய உடன்படிக்கைக்கு எதிராக செயற்பட்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, புசா முகாமில் அடைக்கப்பட்டிருந்தார் விடுதலையான இவர்பின்னர் பிரித்தானியாவுக்கு சென்று தஞ்சமடைந்தார்
அரசாங்கம் மன்னார் கர்பக் வீதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கிய காணிகளுக்கே இவர்கள் பணத்தை அறவிட்டு, அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் இந்த காணிகளில் பெரும் பகுதியை இவர்கள் தமது உறவினர;களுக்கு பங்கிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அந்தத் தகவல்களின் மூலம் தெரியவருகிறது.
}


லெப் கதிர்ச்செல்வன் 2ம் ஆண்டு வீரவணக்க நாள் (01-09-2008) 





July 30th, 2010
ஈழமாறன் 
கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் (22.10.1977 - 29.08.1993) 


