பதிவு

ஐ.நா.வுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்: இலங்கையிடம் ஜப்பான் வலியுறுத்தல்

singapore_1

மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக ஐ.நாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயா ஒகாடா மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

டோக்கியோ நகரில் நேற்று வியாழக்கிழமை இலங்கை அமைச்சர்களை சந்தித்தபோதே ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

இதேவேளை, ஜப்பானில் நேற்று ஊடகவியலாளர் மாநாடொன்றில் பங்குபற்றிய இலங்கை அமைச்சர்கள் இலங்கையின் தற்போதைய சூழ்நிலை இரு நாடுகளினதும் சிறந்த பொருளாதார உறவுக்கு வாய்ப்பாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

ஜப்பானிய – இலங்கை பொருளாதாரக் கூட்டுறவுக் குழுவினரையும் இலங்கை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர்.
இக்கட்டான வேளைகளில் உதவியளித்தமைக்காக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

}
Share/Bookmark You can leave a response, or trackback from your own site.


மேலதிக செய்திகள்
July 30th, 2010


Powered by WorldTamils | Donate me Tamil Media