டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ் உண்ணாவிரதி வெற்றி டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகளுக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஈழத்தமிழ் ஏதிலி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாகஇ 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7 ஆம் திகதிஇ இலங்கை தமிழ் அகதி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
9 அக்ரோபர் 2009 அன்று டெய்லி மெயில் என்ற பத்திரிகைஇ பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மீது உண்மைக்குப் புறம்பான பாரிய அவதூறு குற்றச்சாட்டு ஒன்றைப் பிரசுரித்திருந்தது. “உண்ணாவிரதியின் 7 மில்லியன் பிக் மக்” என்று தலைப்பிடப்பட்ட அந்தச் செய்தியில்இ திரு.சுப்பிரமணியம் தனது உண்ணாவிரத காலத்தில் இரகசியமாக பேகர்களைச் சாப்பிட்டதாக பொய்யான குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன் இஅவரது இந்த நடவடிக்கையால் காவல் துறையினர் பொது மக்களின் பணத்தினை விரயமாக்க நேரிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சண் பத்திரிகை இணையத்தளத்தில்இ”உண்ணாவிரதி இதை விரும்பினார்” என்ற செய்தியில் மீண்டும் இதே பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று இலண்டன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்இ குறித்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில் பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன்இ குறித்த தவறான செய்தியைத் திருத்திக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்தார்கள்.
இரு பத்திரிகைகளும் பரமேஸ்வரனிடம் மனப்பூர்வமாகவும்இ முழுமையாகவும் மன்னிப்புக் கோரி இருப்பதுடன்இ அவரது சட்டச் செலவுகள் உட்பட கணிசமான இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளனர். பரமேஸ்வரன் இன்று கூறியதாவது: “இந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால் எனது மனச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன்இ நான் மீண்டும் எனது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும்.
கடந்த 8 மாத காலமாக எனது வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாத சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததுடன்இ அந்தக் கால கட்டங்களில் எனது சொந்தவாழ்வை முடித்துக்கொள்ளும் அளவிற்குக் கூட சிந்தித்து இருக்கிறேன். குறித்த பத்திரிகைகள் பிரசுரித்த பொய்யான செய்திகளின் விளைவாகஇ என்னில் எந்தத் தவறும் இல்லாதபோதும்இ நான் எனது நண்பர்களை இழந்தேன்இ எனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டேன்இ அத்துடன் தமிழ் சமூகத்தினரால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.
குறித்த இரு பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அப் பத்திரிகைகள் பிரசுரித்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை எனது உண்ணாவிரத காலத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும்இ என்னை மதித்து என்னுடன் உதவியாக நின்றவர்களுக்கும் நிருபிக்க வேண்டியது எனது கடமை என்பதை நான் உணர்ந்தேன்.
தற்பொழுது இரு பத்திரிகைகளும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அறிவித்துள்ளதுடன்இ மன்னிப்பும் கோரியுள்ளன என்பதால்இ அந்த மக்கள் பத்திரிகைகளின் மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொள்வதுடன் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்களென நான் மனப்புர்வமாக நம்புகிறேன்.
ஈழத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”
பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று தெரிவித்துள்ளதாவது: பொய்யான குற்றச்சாட்டுக்கள் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து இந்த 8 மாதங்களாக அந்தச் செய்திகள் தமிழ் சமுதாயத்திலும் அதனைத் தாண்டியும் ஏற்படுத்திய அவப்பெயர்இ சந்தேகம்இ அவநம்பிக்கை என்பவற்றுடனேயே பரமேஸ்வரன் வாழ வேண்டி இருந்தது.
இரு பத்திரிகைகளும் இறுதியில் உண்மையை உணர்ந்து கீழிறங்கி வந்து தாம் பரமேஸ்வரனிற்கு உருவாக்கிய மனவேதனைக்கும்இ துன்பத்திற்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
}



லெப் கதிர்ச்செல்வன் 2ம் ஆண்டு வீரவணக்க நாள் (01-09-2008) 





July 29th, 2010
வன்னியன் 
கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் (22.10.1977 - 29.08.1993) 


