வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் இயக்குநர் சீமானை சந்தித்த புதியபார்வை இதழின் ஆசிரியர் நடராசன் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியில் இயக்குநர் சீமானை சிறையில் போடுவதால் அவரது மன எழுச்சியை எவ்விதத்திலும் ஒடுக்கிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த தமிழக மீனவர் படுகொலை கண்டன கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குநர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, புதியபார்வை இதழின் ஆசிரியர் நடராஜன் ஆகியோர் இன்று காலை வேலூர் ஜெயிலில் சந்தித்து பேசினார்.
பின்னர் நடராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீமான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை வாக்கிங் செல்ல அனுமதிக்கவில்லை. அவர் மனதிடத்துடன் உள்ளார்.
அவர் எந்த வித தேச விரோத செயலிலும் ஈடுபடவில்லை. நமது நாட்டில் கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் உள்ளது.
வேகமாக பேசும்போது சில வார்த்தைகள் வரலாம். அதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.
எனவே சீமான் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். என் மீதான வழக்கு அரசியல் காழ்புணர்வு காரணமாக போடப்பட்டுள்ளது. அதை நான் சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொளத்தூர் மணி நிருபர்களிடம் கூறுகையில் சீமான் கைது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. அவர் மீதான நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
}


லெப் கதிர்ச்செல்வன் 2ம் ஆண்டு வீரவணக்க நாள் (01-09-2008) 





July 29th, 2010
வன்னியன் 

கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் (22.10.1977 - 29.08.1993) 


