பதிவு

மயான பூமியில் சல்மான்கானுடன் நடிகை அசின் டூயட்…?

cinema_asin_salmankhan

தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்திவிட்டு இலங்கை ஐஃபா விழாவுக்கு சென்றவர் நடிகர் சல்மான்கான். அவருக்கு தென்னிந்திய  திரைஅமைப்புகள் தடைவிதித்துள்ளன. இந்நிலையில் சல்மான்கான் நடிகை அசின் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கவுள்ளன.

ஆனால் சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் அசின். இந்தப்படத்தின் பெயர் ரெடி. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ரெடி படத்தை அதே தலைப்புடன் ரீமேக் செய்கிறார் பிரபல பாலிவுட் மசாலா இயக்குனர் அனீஸ் பாஸ்மீ. இதே ரெடி படத்தை  உத்தமபுத்திரனாக தனுஷை ஹீரோவாக வைத்து இயக்கி முடித்து விட்டார் இயக்குனர் மித்ரன் ஜவஹர்.

ஹிந்தி ரீமேக்கில்  சல்மான் ஜோடியாக நடிக்க,  ஐஃபா விழா சர்ச்சை தொடங்குவதற்கு முன்பே கால்ஷீட் கொடுத்து விட்டாராம் அசின். இப்போது சல்மான் கானுடன் நடிப்பதை தவிருங்கள் என்று கோலிவுட் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும்,  அக்ரீமெண்ட் சைன் பண்ணிவிட்டேன். இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது, வரும் விளைவுகளை எதிர் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்கிறார் தனது மீடியா நண்பர்களிடம்.

இதற்கிடையில் இந்தப் படத்தை முதலில் மொரிஸியஸ் தீவில் படம் பிடிக்க திட்டமிட்டிருந்தாரம் இயக்குனர்.  ஆனால் ஐஃபா விழாவுக்குப் பிறகு இலங்கை அரசாங்கம் சல்மான்கனுக்கு சலுகைகளை அள்ளி வீச,  இப்போது மொத்த லொகேஷன்களையும் இலங்கைக்கு மாற்றி விட்டார்கள். வரும் ஜூன் 23 முதல் இலங்கையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். இந்தப்படத்தின் ஹீரோயினாக நடிப்பதன் மூலம் அசின் நடிக்கும் ஹிந்திப்படம் ஒன்று முதல்முறையாக தென்னிந்தியா முழுவதும் தடை செய்யப்படுகிறது.

அதேநேரம் விஜயுடன் அசின் ஜோடி சேர்ந்து நடித்துவரும் காவல்காரன் படத்துக்கு தமிழ்நாட்டில் பிரச்சனை இருக்காது என்றாலும், இலங்கையில் நடைபெரறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதை மயான பூமியில் டூயட் பாடச் சென்ற அவலமாகவே  தமிழர்கள் பார்ப்பார்கள், எனவே காவல்காரன் படத்தை அசின் பொருட்டு புறக்கணிக்கும் ஆபத்து கூடி வருவது உறுதி என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

இன்னொரு பக்கம் சல்மான் கானுடன் இணைந்து நடிப்பதாலேயே ரெடி படத்தின் மூலம் அசினுக்கு மேலும் எதிர்ப்பு வலுக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும், ஜெனலியாவுக்கு மயிரிழையில் தலை தப்பியத  தெரிந்தும்,  அசின் பணத்துக்காக இலங்கை செல்வது முட்டாள்தனமான முடிவு எனக் கிசுக்கிறது கோடம்பாக்கம்?.

}
Share/Bookmark You can leave a response, or trackback from your own site.


மேலதிக செய்திகள்
June 15th, 2010


Powered by WorldTamils | Donate me Tamil Media