ஜீலை 8 ந்தேதி அன்று வருடல் இணையத்தளத்தில் வெளியிட்டப்பட்ட மனிதநேயப் பயணமும், கே.பி உடனான சந்திப்பும் என்ற கட்டுரையையும், காணொளியும் மீனகத்தில் மீண்டும் மீள்பிரசுரிக்கப்பட்டது.
அக்கட்டுரையிலே, “தனி ஒரு நபராக கூறிய கருத்துக்கும், அக்குழுவில் அவருடனேயே சென்று திரும்பிய ஏனைய மூவரும் கூறும்கருத்துக்களையும் கேளுங்கள். எது சரி? எது பிழை? நீங்களே ஆராய்ந்து பாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
நடக்கின்ற நிகழ்வுகளை, செய்தியாக மக்கள் முன் பதிவு செய்யும் முயற்சியே தவிர, மீனகம் தளத்தின் தனிப்பட்ட பார்வை எதுவும் இல்லை.
இக்கட்டுரையினால், தமிழ் இணையத்தளங்களில் மீனகத்தின் சார்பு குறித்து அய்யம் எழுப்பப்பட்டிருக்கிறது.
மீனகம் தளத்திற்கான ஒரே பார்வை தமிழ் தேசியம் மட்டுமே!
தமிழ்தேசியத்திற்காக இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தும் சிறுமுயற்சியையும் மீனகம் மேற்கொள்ளாது என்று உறுதியளிக்கிறோம்.
தமிழ் பேசும் உறவுகள் அனைவரும் தமிழ்தேசிய விடுதலைக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே மீனகம் தளத்தின் நோக்கம்.
தமிழீழம் ஒன்றே குறி!
புலிக்கொடி ஒன்றே கொடி!!
-ஆசிரியர் குழு.
மீனகம் தளம்,
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்.



லெப் கதிர்ச்செல்வன் 2ம் ஆண்டு வீரவணக்க நாள் (01-09-2008) 





July 10th, 2010
மீனகம் 
கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் (22.10.1977 - 29.08.1993) 


