Breaking News
Home / நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் / சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலகமா ? உள்ளகமா ? ஜெனீவாவில் எதிர் எதிர் அறையில் சிறிலங்கா அரசாங்கம் நா.தமிழீழ அரசாங்கம் !!
சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலகமா ? உள்ளகமா ? ஜெனீவாவில் எதிர் எதிர் அறையில் சிறிலங்கா அரசாங்கம் நா.தமிழீழ அரசாங்கம் !! 1

சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலகமா ? உள்ளகமா ? ஜெனீவாவில் எதிர் எதிர் அறையில் சிறிலங்கா அரசாங்கம் நா.தமிழீழ அரசாங்கம் !!

HF Master Card

ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில், நா.தமிழீழ அரசாங்கமும் சிறிலங்கா அரசாங்கமும் எதிர்எதிர் அறையில் ஒரே நாளில் கூட்டங்களை நடத்திய சம்பவமொன்று பரபரப்பாக பார்க்கப்படுகின்றது.

9ம் இலக்க அறையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், 10ம் இலக்க அறையில் சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக சமூகத்தை நோக்கிய இக்கூட்டங்களை நடாத்தியுள்ளது.

சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (ர்லடிசனை ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து, அனைத்துலக விசாரணையூடாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டுமென்பதனை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூட்டத்தினை 9ம் இலக்க அறையில் நடாத்தியிருந்தது.

இதற்கு நேர்எதிராக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து உள்ளக விசாரணைப் பொறிமுறையினை நியாயப்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் 10ம் இலக்க அறையில் கூட்டத்தினை நடாத்தியுள்ளது.

ஒரேநாளில் எதிர்எதிராக இடம்பெற்ற இக்கூட்டங்கள் பலரது கவனத்தினைப் பெற்றுள்ளதோடு, கம்போடியாவினை மையப்படுத்தி ஐ.நா விசாரணை விவகாரத்தில் முக்கியநபராக பங்காற்றியிருந்த பிரபல சட்டவாளர் Hon. Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence) ICPPG மையத்தின் தலைவர் பேராசிரியர் சொர்ணராஜா, ஐ.நாவுக்கான மொரிசியஸ் தூதரகத்தின் வர்தக விவகாரங்களுக்கான முன்னாள் பிரதிநிதியாக இருந்த Dr. Narsinghen Hambyrajen (Professor of Law, Former Minister Counselor Trade Division, Permanent mission of Mauritius in Geneva) சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும் பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffry Robertson QC, சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியரும் பிரபல மனித உரிமைவாதியுமாகிய இராமு.மணிவண்ணன் ஆகிய முக்கிய பிரமுகர்கள் பங்கெடுப்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இரண்டு உபமாநாடுகளும் முக்கியத்துவத்தினை பெற்றுள்ளன.

இதேவேளை சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்த்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துப் போராட்டம் ஐ.நாவுக்குள்ளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாதம் ஊடகசேவை

Comments

comments

Leave a Reply

Your email address will not be published.

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm