Breaking News
Home / நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் / ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் !
ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் ! 1

ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் !

HF Master Card

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் சுதன்ராஜ், தமிழினப்படுகொலையினைப் புரிந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுகள் மீதான சிங்கள தேசத்தின் கோபத்தையே இச் செய்தி வெளிக்காட்டுகின்றது.

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்காவினை மையப்படுத்திய தொடர் உப மாநாடுகள், இனப்பிரச்சனைத் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு பொறிமுறை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பன்முகச் செயற்பாடுகள், சிறிலங்கா அரசுக்கு அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது எனவும் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான சாட்சியமற்ற போரின் சான்றுகள் தொடர்சியாக வெளிவந்து கொண்டுள்ள நிலையில், அதற்கான பொறுப்புக்கூறலை நிராகரித்து வருகின்ற சிறிலங்கா அரசாங்கம், இவ்வாறான சான்றுகள் போலியானவை என கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published.

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm