Breaking News
Home / இலங்கை / இலங்கைக்கு கள்ளத் தோணியில் வந்ததே சந்திரிகாவின் பரம்பரை: ஞானசார தேரர்
இலங்கைக்கு கள்ளத் தோணியில் வந்ததே சந்திரிகாவின் பரம்பரை: ஞானசார தேரர் 1

இலங்கைக்கு கள்ளத் தோணியில் வந்ததே சந்திரிகாவின் பரம்பரை: ஞானசார தேரர்

HF Master Card

கள்ளத் தோணியில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்த பண்டாரநாயக்க பரம்பரையிலிருந்து வந்த சந்திரிகா, இந்த நாடு யாருடையதென்பதை அறியாமல் இருப்பது நியாயமான ஒரு விடயமே எனத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பு, சந்திரிகாவின் ஆட்சியில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்றிட்டங்கள்

முன்னெடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில் ;

“தனது ஆட்சிக்காலப் பகுதியில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு பெரிய அக்காவாகவே இருந்து வந்தார். தனது ஆட்சியில் “வெண் தாமரை” என்ற அமைப்பொன்றை ஆரம்பித்து இராணுவத்தில் இணைய விரும்பும் இளைஞர்களைத் தடுத்து பிரபாகரனுக்கு உதவி செய்தார். அன்று சந்திரிகாவுடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் சென்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தற்போது புலம்பெயர் அமைப்புகளுடன் கைகோர்ப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சந்திரிகா, இந்த நாடு யாருடையதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தேகம் அவருக்கு வருவது நியாயம்தான். கள்ளத் தோணியில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பண்டாரநாயக்க சமூகத்தின் வாரிசான சந்திரிகாவுக்கு இதுபோன்ற சந்தேகம் வருவது நியாயம்தான்.

பண்டாரநாயக்க என்ற சமூகம் இலங்கையில் இருக்கவில்லை. மூன்று தலைமுறைகளுக்கு முன் இலங்கை வந்த இந்த பண்டாரநாயக்க சமூகம், வெள்ளைக்காரனுக்கு சலாம் போட்டு கண்டிக்கான பிரதான வீதியில் நிலங்களைப் பெற்றுக் கொண்டது.

பரம்பரையின் ஆரம்பம் தெரியாத பண்டாரநாயக்க சமூகத்திற்கு இந்த நாடு யாருடையது என்ற சந்தேகம் வருவது நியாயம்தான். அத்துடன் இன்று வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாமுக்குள் அடைத்து வைத்துள்ளனர். சிவில் நடவடிக்கையில் கூட இராணுவ வீரர்களை ஈடுபடுத்த இந்த அரசாங்கம் விரும்பவில்லை. நல்லாட்சி அரசாங்கத்துக்கு மட்டுமே மக்கள் வாக்களித்தனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதகத்தை ஏற்படுத்துவதற்காக வாக்களிக்கவில்லையென்பதை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் விடுதலைப் புலிகளின் ஆயுதப்படையை மட்டுமே தோற்கடித்துள்ளோம். விடுதலைப் புலிகளின் அரசியல் பலத்தையும் சர்வதேச பலத்தையும் நாம் தோற்கடிக்கவில்லை. ஆகையால் வடக்கில் பாதுகாப்பை குறைக்கக் கூடாது.

அத்துடன் வடக்கில் இராணுவ முகாம்களையும் சோதனைச் சாவடிகளையும் அதிகரிப்பதனூடாகவே அப்பகுதி மக்களின் மனதில் பயத்தினை ஏற்படுத்தி மீண்டும் வடக்கில் தீவிரவாதம் தலைதூக்காமல் தடுக்க முடியும்” என்றார்.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published.

shop giày nữthời trang f5Responsive WordPress Themenha cap 4 nong thongiay cao gotgiay nu 2015mau biet thu deptoc dephouse beautifulgiay the thao nugiay luoi nutạp chí phụ nữhardware resourcesshop giày lườithời trang nam hàn quốcgiày hàn quốcgiày nam 2015shop giày onlineáo sơ mi hàn quốcf5 fashionshop thời trang nam nữdiễn đàn người tiêu dùngdiễn đàn thời tranggiày thể thao nữ hcm